ஜனவரி 24, புதுடெல்லி (Technology News): வெளியூர்களுக்கு செல்வோர் ஹோட்டல் ரூம்களில் தங்குவது வழக்கம். அந்த ஹோட்டல்கள் பெரியதோ அல்லது சிறியதோ அங்கு முதலில் ரூம்களில் மறைவான கேமராக்கள் ஏதும் இருக்கின்றனவா என கண்காணிக்க வேண்டும். ஹோட்டல்கள் மட்டுமல்ல துணிக் கடைகளில் டிரையல் ரூம்களிலும் கூட ஹிட்டன் கேமராக்கள் இருக்க வாய்ப்புள்ளது. வெளியில் எங்கு தங்கினாலும் ஒரு முறை மறைவான கேமராக்கள் ஏதும் இருக்கின்றனவா என செக் செய்ய வேண்டும். நாகரீகமாக வளர்ந்த இக்காலத்தில் இது போன்ற செயல்கள் யாரும் செய்ய மாட்டார்கள் என நினைப்பது தவறு. தொழில் நுட்பம் அதீத வளர்ச்சி அடைந்து வருவதும் நினைவிருக்கட்டும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உயர் ரக கேமராக்கள் குறைந்த விலையில், சிறிய அளவிலும் இன்றளவில் எளிதில் கிடைத்து நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் கேமராக்களைத் தவிர ரகசிய கேமராக்கள் பயன்படுத்துவது குற்றமாகும். ஹிட்டன் கேமராக்களை கண்டறிய பல வழிகள் இருக்கின்றன. Google Doodle: வானில் தோன்றும் அரை நிலா.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..!

முதலில் தங்கவிருக்கும் அறைக்குள் தங்களால் முடிந்த வரை வெளிச்சம் இல்லாதவாறு மாற்ற வேண்டும். ஜன்னல், கதவுகளை அனைத்தையும் அடைத்துவிட்டு விளக்குகளை அணைத்து விட வேண்டும். துளியளவு வெளிச்சம் இல்லாதவாறு மாற்றிய பிறகு, செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்து அறையை முழுவதும் புகைப்படம் எடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் புகைப்படத்தில் சிவப்பு அல்லது நீல நிறப்புள்ளி போன்று தெரிந்து விடும். அறை முழுவதும் இருட்டாக இருக்கையில் மொபைலின் ஃப்லாஸ் லைட் பயன்படுத்தி கேமராக்களை கண்டறியலாம். சாதாரண கண்களில் கேமராக்களின் லென்ஸ்களை பார்க்க முடியாது. ஆனால் ஃப்லாஸ் லை ட் அடித்துப் பார்க்கையில் லென்ஸில் ரிஃப்லக்‌ஷன் கிடைக்கும். இதை வைத்து கண்டறியலாம். இதற்கு ஹை இண்டன்சிட்டி ஃப்லாஸ்லைட் தேவை.

ரகசிய கேமராக்களை கண்டறிய பல செயலிகளும் கிடைக்கின்றன. நம்பகத் தன்மையுடைய செயலியைப் பதிவிறக்கம் செய்து, ரேடியோ ஃப்ரீக்குவன்சியை வைத்து கேமராக்களை கண்டறியலாம். சில செயலிகள் கூகுள் லென்ஸ் போன்று இருக்கும் இதை பயன்படுத்தி ஸ்கேன் செய்தும் கண்டறியலாம். சில ரகசிய கேமாராக்கள் இருக்கும் இடங்களில் போன் பேசினால் சற்று சிக்னல் குறையும். யாருக்காவது கால் செய்து அறை முழுக்க சோதிக்கலாம். ஆனால் இது அனைத்து கேமராக்களுக்கும் பொருந்தும் எனக் கூறிவிட முடியாது. எப்போதும் அறைக்குள் வந்ததும், ஒரு முறை அறையை சுற்றி பார்ப்பது நல்லது. எதேனும் பொருள் வித்தியாசமாக தென்பட்டாலோ அல்லது பொருட்கள் இடம் மாறியிருந்தாலும் கண்டிபாக செக் செய்வது அவசியம். Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

அதிகமாக ரகசிய கேமராக்கள் வைக்க சத்தியக்கூறுகள் உள்ள இடங்கள்:

அறையில் எந்த எந்த பகுதியில் இருக்கலாம் என சந்தேகப்படுகிறீர்களோ அங்கு முதலில் தேட வேண்டும்.

ஸ்மோக் டிடெக்டர், புத்தகம், அலமாரிகள், ஆணிகள், கடிகாரம், துணிக் கொக்கிகள், பேனா, காற்றாடி, ஏசி, கேபிள் பாயிண்ட், சுவர் அலங்காரப் பொருட்கள், கதவு, ஜன்னல் ஆணிகள், கண்ணாடிகள், மேசைகள் இருந்தாலும் சிறிய கோமராக்களுக்கு கண்டிப்பாக மின்சாரம் தேவைப்படும் அதனால் கேபில்கள் கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்கும். அதனால் வயர்கள் செல்லும் பகுதிகளிலும் கண்காணிக்கலாம். ரகசிய கேமாரக்கள் இருப்பதை கண்டறிந்தால் முதலில் அதை தொடாமல் எந்த இடத்தில் இருக்கிறது என ஆதாரத்திற்காக வீடியோ எடுத்து வைக்க வேண்டும். சைபர் க்ரைம் அல்லது காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.