ஜனவரி 20, புதுடெல்லி (New Delhi): பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடிகளுக்கு பதில் லென்சுகளை பயன்படுத்துவது வழக்கம். பார்வையில் பிரச்சனை அல்லாதவர்களும் விதவிதமான கலர்களின் தங்கள் கண்களை ஸ்டைலாக காட்டிக் கொள்வதற்காகவும் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துகின்றனர். எப்போதாவது காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்தினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பலரும் கருதுகின்றனர். ஆனால் தங்களின் காண்டாக்ட் லென்ஸை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவில்லை எனில், இது கண்களில் தொற்றை ஏற்படுத்தி பெரிதளவு பாதித்து பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். கண்களுக்குப் பயன்படுத்தும் காண்டாக்ட் லென்சுகளை ரெகுலரான அடிப்படை சுத்தம் செய்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதே போல் கண்களையும் அக்கறையுடன் பாதுகாத்தால் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
கண் பரிசோதனை:
காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தாலும் இல்லாவிடினும் வருடத்திற்கு இரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். காண்டாக்ட் லேன்ஸ்களாலோ அல்லது வேறு காரணத்தால் தொற்றுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள முடியும். Sambhav Smart Phone: இந்திய இராணுவம் பயன்படுத்திய 'சம்பவ்' ஸ்மார்ட்போன்கள்; வெளியான சுவாரஸ்ய தகவல்..!
பரிமாற்றத்தை தவிர்க்கவும்:
பலரும் காண்டாக்ட் லென்ஸ்களை குடும்ப உறுப்பினரிடமோ நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளக் கூடாது. இது கண்களுக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கிருமிகள் தொற்றிக் கொள்ளும். மேலும் கருவிழியில் அலற்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கண் பார்வை பறிபோக அதிகம் வாய்ப்புண்டு.
லென்ஸுடன் தூக்கமா?
காண்டாக்ட் லென்ஸ் கண்களில் இருக்கும் போது தூங்குவது, கண்களை சிவவாக்குதல், புண் ஏற்படுத்தல், கண் திசுகளை சேதமடைய வைப்பது, தொற்றுகளை ஏற்படுத்துவது போன்றவைகளுக்கு காரணமாகிறது. மேலும் கருவிழியிலும் சேதம் ஏற்படும். இரவு முழுவதும் அணியும் ஸ்பெஷல் காண்டாக்ட் லென்ஸாக இருந்தாலும் தூங்கும் போது லென்சுகளை தவிர்க்க வேண்டும். இது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
கைகளும் சுத்தம் வேண்டும்:
கண்களுக்கு கைகள் செல்லும் போதே கைகளின் சுத்தத்தை எப்போதும் யோசிக்க வேண்டும். அதில் நேரடியாக கண்களில் வைக்கும் காண்டாக்ட் லென்சுகளை தொடுவதற்கு முன்பே கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமான துண்டால் துடைக்க வேண்டும். இதன் பின்னர் காண்டாக்ட் லென்சுகளை பயன்படுத்தலாம். கைகளில் கிருமிகள் அதிகமிருப்பதால் கண்களுக்கு எளிதில் செல்லும்.
லென்ஸ் சுத்தம்:
ஒரு நாள் மட்டும் பயன்படுத்தும் லென்சுகளை தவிர, வார, மாத பயன்படுத்தும் லென்ஸ்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கண்களுக்கு ஏற்ற சொலியூசனை பயன்படுத்தி தினமும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் லென்களுக்கு ஏற்ற விதத்திலும் கண்களுக்கு ஏற்ற விதத்திலும் இருக்குமாறு சொலியூசனை மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். Psychological Pricing: கடைகளில் விற்கப்படும் 99,149,199 ரூபாய் பொருட்கள்.. ஒரு ரூபாய் குறைக்க காரணம் என்ன?! விபரம் உள்ளே.!
தண்ணீரை தவிருங்கள்:
லென்சுகளை சுத்தம் செய்ய தேர்ந்தெடுத்த சொலியூசனை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதனை தவிர்த்து தண்ணீர் போன்ற வேறெந்த திரவத்தையும் பயன்படுத்தி லென்ஸை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் லென்ஸ்கள் நிச்சயம் கண்களை மோசமாக பாதிக்கும். மேலும் தண்ணீர் லென்சுகளின் வடிவத்தையும் மாற்றிவிடும். காண்டாக்ட் லென்ஸ் வைத்திருக்கும் போது முகம் கழுவுவதையும் தவிர்க்க வேண்டும். நீச்சல் செய்யும் போது லென்கலை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு வேளை அதிக பார்வை குறைபாடு உள்ளவர்கள் லென்சுகள் அணிந்தால் நீச்சலுக்கான கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீரில் இருந்து வெளியில் வந்தவுடன் லென்ஸை நீக்கிவிடுவது நல்லது.
லென்ஸ் கேஸ் கேர்:
லென்சுகளை சுத்தம் செய்து பாதுகாப்பதை போன்றே அதன் கேசையும் சுத்தமாக வைப்பது அவசியம். ஒருவ்வொரு முறை லென்ஸ் பயன்படுத்தியதும் அதிலிருக்கும் பழைய சொலியூசனை வெளியில் எடுத்து விட்டு சுத்தமாக துடைக்க வேண்டும். 3 மாதம் அல்லது 5 மாதத்திற்கு ஒரு முறை இந்த கேஸை மாற்றி விட வேண்டும். மேலும்ம் லென்ச் கேஸை திறந்தே வைத்திருக்க கூடாது. காற்றில் பரவும் கிருமிகள் தூசுகள் இதில் செல்ல வாய்ப்புள்ளது. வெளியிடங்கலில் லென்ஸ் அணிவதை தவிர்ப்பது கண்களுக்கு பாதுகாப்பானது.