Saving Schemes (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 20, சென்னை (Technology News): ‘சேமிப்பும் முதலீடும் ஒன்று தான்’ என்பது நம்மில் பலரிடம் இருக்கும் ஒரு பொதுவான கருத்தாகும். பிற்காலத்திற்கு நிதிப்பிரச்சனைகளுக்கு உதவும் விதத்தில் செலவுடும் அனைத்தும் முதலீடு சேமிப்பு என கருதுகிறோம். ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து பணத்தை அதற்கேற்ப கையாளவேண்டும்.

சேமிப்பு என்பது வரவில், செலவுகள் போக மீதம் கிடைப்பதை சேமிப்பதேயாகும். ஆனால் முதலீடு என்பது நம்மிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக மாற்றுவதற்கு எதிலாவது போட்டுவைப்பதே முதலீடாகும். அதாவது ஒரு சீசன் கிடைக்கும் பழங்களை சேமித்து கிடைக்காத நேரத்தில் பயன்படுத்துவது சேமிப்பாகும். முதலீடு என்பது விதை விதைத்து மரமாக்கி அதில் பல பழங்கள் கிடைப்பது போன்றதாகும்.

இந்தியர்களிடம் சேமிப்பு, சிறுவதிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறது. அதே போல இந்திய கலாச்சாரத்திலும் சேமிப்பு பெரும் பங்கு வகிக்கிறது. தாத்தா பாட்டி வீடுகளுக்கு சென்று வருகையில் பெரியவர்கள் தரும் பணத்தை வீடுகளில் சேமித்து வைத்து பிடித்த பொருட்கள் வாங்குவது முதல் திருமணம் உட்பட அனைத்து வீட்டு விழாக்களிலும் தங்கம், வீடு என பிற்காலத்தில் பயனளிக்கும் பொருட்களை பரிசிளிப்பது என அனைத்துமே சேமிப்பிற்கானதகவே இருக்கிறது. ஆனால் பணத்தை வளர்ச்சியடைய வைக்கும் முதலீடுகள் குறைவாகவே செய்யப்படுகிறது. Home Insurance: செலவு வைக்கும் வீட்டிற்கு காப்பீடு.. தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

சேமிப்பும் முதலீடும்:

முதலில் முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கான தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறுகிய கால செலவிற்காக சிறிது சிறிதாக தொகை சேகரிப்பதே சேமிப்பாகும். உதாரணமாக பிடித்த போன், கார் போன்ற பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க, பொங்கல் தீபாவளி, விழாக்கால செலவுகளை சமாளிக்க, வருடாந்திர பள்ளிக்கட்டணம் கட்ட, அடகு நகைகளை திரும்பப் பெற, இவைகளுக்கானவை சேமிப்பாகும்.

முதலீடுகள் என்றால் பல வருடங்களுக்கு பிறகு வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே நிதியை தயார் செய்து கொள்வது. அதாவது எதிர்காலத்தில் வீடு, மனை வாங்க, ஓய்வுகால நிதி, மருத்துவ தேவை, குழந்தைகளின் திருமண செலவுகள் போன்றவற்றிற்காக பணத்தை இரட்டிப்பாக்குவதற்காக முதலீடு செய்வதாகும். இதில் முதலிடும் பணம் வளர்ச்சியடைந்து வருங்கால நிதி சுமையைக் குறைக்கும்.

சேமிப்புகளை வீடுகளில் தாமகவே செய்யலாம். மகளிர் குழுக்கள், சிறிய சங்கள்கள் என சிறிய அளவில் சேமிக்கலாம். முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தைகள், அஞ்சலக திட்டங்கள், நிலம், தங்கம் என முதலிடும் பணம் இரட்டிபாக பெருகும் இடங்களில் முதலீடு செய்யலாம்.

குறுகிய கால தேவைகளுக்காக சேமிப்பை மேற்கொள்வது போல முதலிடுவதற்காகவும் சேமிக்க வேண்டும். எதிர்கால தேவைகளுக்காக முதலிடும் போது அதுவும் எதிர்கால சேமிப்பாகவே கருதப்படுகிறது.

சேமிப்பில் ரிஸ்குகள் குறைவு தான். ஏனெனில் சேமிப்பு பணத்தை குறுகிய காலத்திலேயே எடுத்து பயன்படுத்திவிடுவோம். ஆனால் முதலீடு என்பது பணத்தை எதில் முதலிடுகிறோம் என்பதை பொருத்தே ரிஸ்குகள் அமைகின்றன. பங்குச் சந்தையில் ரிஸ்குகள் சற்று அதிகம் தான். இருப்பினும் பங்கு சந்தையில் கிடைக்கும் லாபம் வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்காது. மியூச்சுவல் ஃப்ண்ட், தங்கம், நிலத்தில் முதலிட்டால் அவைகளில் சற்றும் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு இருந்தாலும் அவசரகாலத்தில் நிதிபிரச்சனையை சமாளிக்க கைக்கொடுக்கின்றன.

சேமிப்பிற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை முதலீட்டிற்கும் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்காக சேமிப்பை மேற்கொள்ளும் நாம், எதிர்கால நிதி தேவையை சமாளிக்க முதலீடும் செய்ய வேண்டும்.