Demat Account (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 26, சென்னை (Technology News): வங்கியில் பணப்பரிமாற்றம் மற்றும் சேமிப்புக்காக நாம் தொடங்கும் கணக்கை போலவே, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க, விற்க தேவைப்படும் அக்கவுண்ட் தான் டிமேட் கணக்கு (Demat account) ஆகும். முன்பு பங்குகளை வாங்க அந்த நிறுவனத்திலிருந்து ஷேர் சர்டிஃபிகெட் தருவார்கள். அது தொலைந்து அல்லது அழிந்துபோகக் கூடியது. அதற்கு பதிலாகவே இந்த மின்னனு டிமேட் அக்கவுண்ட்.

வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள், மற்றும் வைப்புத்தொகை ஆகியவை மின்னணு வடிவில் உள்ளதோ அதே போன்று டிமேட்டிலும் பங்குகளை மின்னணு வடிவில் இருக்கும். SEBI-யின் வழிகாட்டுதல்களின் படி, Dematerialized வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒரு வடிவத்திலும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. ஐபிஓ பங்குகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், டிமேட் கணக்கு வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆகவே, நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட விரும்பினால், உங்களுக்கு டிமேட் கணக்கு அவசியமாகும். Confirm Ticket Cancellation: ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால்… எவ்வளவு பிடித்தம்? விபரம் உள்ளே.!

டிமேட் கணக்கு தொடங்கும் முறை:

டிமேட் கணக்கை வங்கிகள் அல்லது வங்கிகளுடன் சார்ந்த புரோக்கர் நிறுவனங்கள், வங்கி சாராத புரோக்கர் நிறுவனங்கள் மூலம் தொடங்கலாம். வங்கிகளில் சேமிப்பு கணக்குடன் டிமேட் கணக்கு இருப்பதால், பரிவர்த்தனை செய்வது எளிதாக இருக்கும். வங்கி சாராத நிறுவனங்களில் கணக்கு தொடங்கினால், பணப் பரிவர்த்தனை சற்று தாமதமாகும். மேலும், பங்குகளை வாங்கி விற்பதற்கான புரோக்கரேஜ் கட்டணம், சேவைக் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். இது நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். எந்த மாதிரி டிமேட் கணக்கு உங்களுக்கு சரியாக இருக்கும் என நன்கு யோசித்து முடிவு செய்யவும். இந்தியாவில் உள்ள அனைத்து டிமேட் கணக்குகளையும், அரசின் கீழ் செயல்படும் NSDL & CDSL ஆகிய அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.