Sunita Williams Dance (Photo Credit: @NASA X)

ஜூன் 07, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை தான் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams). இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இப்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார். இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார். Kangana Ranaut Slapped By CISF Constable: கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்ஃஎப் பெண் கான்ஸ்டபிள்.. அறைந்த பெண் மீது கங்கனா புகார்..!

இவர்கள் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். ஆனால், இந்த பயணமானது, பல்வேறு காரணங்களுக்காக மூன்று முறை ஒத்திப்போனது. இருப்பினும் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். மேலும் சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கினார். தொடர்ந்து 27 மணி நேரம் பயணித்து, இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அங்கு சென்றதுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ், நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.