அக்டோபர் 16, டெல்லி (Technology News): இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா நீங்கள்? கட்டாயம் இன்ஸ்டாவில் உசாராக இருப்பது அவசியம். இன்ஸ்டாவில் பயப்படும் அளவில் என்ன இருக்கப்போகிறது என நினைக்க வேண்டாம். ரீல்ஸ், மீம்ஸ் பார்க்க தான் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் ஆபத்துகளும், மோசடிகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்கவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், பலரின் அனுபவங்களையும் தெரிந்து கொள்வதற்கும் சமூக வலைதளங்களை அனைவரும் பயன்படுத்துகின்றன. பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மோசடி (Insta Scams): சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பல விதங்களில் மோசடிகள் (Guarding Against Instagram Scams) அரங்கேறி வருகின்றனர். இன்ஸ்டாவில் தெரிந்தவர்களின் கணக்கை ஹேக் செய்து அதன் மூலம் வந்து பணம் கேட்பதும், புதிய பிசினஸ்கள், ஷேர் மார்கெட், கிரிப்டோ கரன்ஸியில் லாபம் பார்க்க முடியும் என கூறி பணம் பறிப்புகளும் நடந்து வருகிறது. எளிய முறையில் பணம் சம்பாத்திக்கும் ஆசையில் யாரிடமாவது பணத்தை கொடுத்து இழந்துவிடுகின்றனர். சமூக வலைதளத்தில் தெரிந்தவரின் ஐடியில் இருந்தே பணம் கேட்டு மெசேஜ்கள் வந்தாலும் முதலில் அந்த நபரை தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும். அவராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் சைபர்கிரைம்மில் புகார் அளிக்க வேண்டும். Realme Techlife Studio H1: ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 ஹெட்போன்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
பேக் ஐடி: இளைஞர்களுக்கு பொறி வைக்கும் விதத்தில் இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதில் ஆபாசமாகவோ அல்லது நம்பகத்தன்மை ஏற்படுத்தும் விதத்தில் பழகி பணத்தை பறிக்கின்றனர். இதனால் அறிமுகமில்லாத நபர்கள் இது போன்று பேசினால் அவர்களை தவிர்ப்பது நல்லது. பல பேர் இது போன்று சிக்கி வெளியில் கூறவும் முடியால் பணத்தை இழந்துள்ளனர்.
மார்கெட்டிங்: சமூக வலைதளத்தை மார்கெட்டிங்கிற்காக பயன்படுத்தி பல வியாபாரிகளும், சிறுதொழில், கைவினைக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால் இதே போல் அதே போல பல போலி கணக்குகளும் இன்ஸ்டாவில் கொட்டிக் கிடக்கின்றன. அதிக டிஸ்கவுண்டில் பொருட்கள் கிடைக்கின்றது என நினைத்து பலரும் ஆர்ட்டர் செய்து பணத்தை அனுப்பி விடுகின்றனர். பிறகே அது போலி என தெரிய வரும். சமூக வலைதளத்தில் பொருட்கள் வாங்குவதற்கு முன் அந்த கணக்கில் மற்றவர்கள் வாங்கியிருக்கிறார்களா அவர்களின் ரிவீவ்களை தெரிந்து கொண்டு வாங்கவும்.
பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டிராகிராம் பயன்படுத்தினாலும் நீங்கள் இணையத்தின் கண்காணிப்பில் உள்ளீர்கள் என மறவாதீர்கள். மோசடிகள் ஒரு கிளிக் மூலம் கூட நடைபெறும்.