Asteroid (Photo Credit: @Vinodrviv)

ஆகஸ்ட் 19, சென்னை (Technology News): விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியங்களுக்கு உள்ளானது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசாவுடைய (NASA) பங்களிப்பு என்பது முதன்மையானதாக இருக்கிறது. இந்நிலையில், விண்வெளியில் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் மைல் (16,09,344 kmph) வேகத்தில் நகரும் சிறுகோளை கண்டறிந்துள்ளது. பிளானட் 9 (Planet 9 project) என்ற திட்டம் மூலம் விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர். இதற்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

CWISE J1249 என்பதனை பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து நாசா துல்லியமாக கண்காணிக்கிறது எனவும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது, எனவே யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் நாசா அறிவுறுத்தியுள்ளது. Mobile Service: மொபைலை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் செய்ய வேண்டியவைகள்.. விபரம் உள்ளே..!

நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் சிறுகோள்கள், பூமி (Earth) உள்ளிட்ட பல கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறான சிறுகோள்கள் (Asteroid) வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே நிறைய இருக்கின்றன. ஒரு சில சிறுகோள் மற்ற கிரகங்களின் மீது திடீரென மோதி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.