New IRCTC Rule (Photo Credit: LatestLY)

ஜூலை 22, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் எளிமையான பொது போக்குவரத்து சேவை என்றால் ரயில் சேவை தான். இந்தியாவின் இந்திய ரயில்வே நிர்வாகம் (IRCTC) சேவை உண்மையில் பயணிகளுக்கான ஒரு மாபெரும் பயண சாம்ராஜ்யமாக செயல்பட்டு வருகிறது. அதிகளவு பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல IRCTC சில புதிய மாற்றங்களை (New Rules) கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்:

  • இனி ரயில் பயணிகள் அவர்களின் நீண்ட தூர பயணத்தின் போது, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவர்களுடைய மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப், பவர் பேங்க் போன்ற எந்தவிதமான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் சார்ஜ் செய்ய கூடாது. Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!
  • ரயிலில் தீ பிடிக்கும் பொருட்களான எரிவாயு சிலிண்டர்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், உலர்ந்த புல், இலைகள், பட்டாசு கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
  • ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை கொண்டு சென்றாலோ, அவரிடமிருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் குடிபோதையில் பயணம் செய்பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
  • வயதானவர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், கர்பிணிப் பெண்களுக்கும் இனி லோயர் பெர்த் முன்னுரிமை வழங்கப்படும். பொது பயணிகள் லோயர் பெர்த் வேண்டுமென்று விண்ணப்பித்தாலும், வயது அடிப்படையிலேயே இருக்கைகள் வழங்கப்படும்.