ஏப்ரல் 30, சென்னை (Technology News): இந்திய சந்தையில் கடந்த சில வருடத்தில் மிகப்பெரிய அளவில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நத்திங் ஸ்மார்ட்போன், தற்போது ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், நத்திங் ஃபோன் (2a) குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், நத்திங் போனின் இந்தியாவிற்கான ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டுள்ளது. இது வருகின்ற மே மாதம் 2-ஆம் தேதியில் இருந்து பிளிப்கார்டில் (Flipkart) விற்பனை செய்யப்பட உள்ளது. Benefits Of Cucumber: வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

நத்திங் 2ஏ ஸ்பெஷல் எடிசன் (Nothing 2A Special Edition): இதில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் உள்ள போன் ரூ. 23,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ரூ. 25,999-க்கும் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளன. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான இதில், 4,700mAh 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6.7-இன்ச் OLED 120Hz டிஸ்ப்ளே, 1,600 nits அதிகபட்ச பிரகாசத்துடன் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 50MP+50MP பின்புற கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களுடன் இது விற்பனைக்கு வந்துள்ளது.