Olympics in Space (Photo Credit: @NASA X)

ஜூலை 29, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams). இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இப்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார். இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் சென்றுள்ளார்.

விண்வெளி பயணம்: இவர்கள் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். ஆனால், இந்த பயணமானது, பல்வேறு காரணங்களுக்காக மூன்று முறை ஒத்திப்போனது. இருப்பினும் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். மேலும் சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கினார். Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. இந்திய வீரர்களின் இன்றைய போட்டி.. அடுத்த பதக்கம் யாருக்கு?!

பூமிக்கு எப்போது வருகை?: ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை தள்ளி போட்டது. இதனையடுத்து அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என போயிங் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் ஒலிம்பிக்ஸ்: இதற்கிடையில், சுனிதாவின் தனித்துவமான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, அதில் அவர் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வீடியோவில், அனைத்து விண்வெளி வீரர்களும் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார், மற்ற விண்வெளி வீரர்கள் பளு தூக்குதல், பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.