செப்டம்பர் 10, சென்னை (Technology News): சர்வதேச அளவில் நிலவு குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் ரஷ்யாவின் (Russia) அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் நிலவில் அணுமின் நிலையத்தை (Nuclear Power Plant) அமைக்க திட்டம் தீட்டி உள்ளது. ஏற்கனவே ரஷ்யா சீனாவுடன் இணைந்து நிலவில் ஆய்வுக்கூடம் அமைக்க திட்டமிட்டு இருந்தது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணுமின் நிலையம் அமைய உள்ளது. World Suicide Prevention Day 2024: உலக தற்கொலை தடுப்பு தினம்.. தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள்வது எப்படி?!
நிலவில் அணுமின் நிலையம்: முதற்கட்டமாக 0.5 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட சிறிய அணு உலையை உருவாக்க உள்ளனர். இந்த அணுமின் நிலையம் ஆனது வரும் காலத்தில் பல்வேறு ஆய்வுகளை செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் (India, China) ஆர்வம் காட்டி வருவதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் அலெக்சி லிகாச்சேவ் கூறியுள்ளார். மேலும் இந்த அணுமின் நிலையம் ஆனது 2036 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.