செப்டம்பர் 30, சென்னை (Technology News): நம்மில் பலருக்கு தெரியும் சூரியனை நிலா மறைத்தால் சூரியகிரகணம் , பூமி சூரியனை நிலவிடமிருந்து மறைத்தால் அது சந்திரகிரகணம் என்றும். பூமி சந்திரனை விட பெரிய அளவுடையது சூரியனை மறைக்க முடியும் ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது எப்படி சூரியனை மறைக்கிறது தெரியுமா? என்னதான் நிலா 400 மடங்கு சூரியனை விட சிறியதாக இருந்தாலும், சூரியன் நிலாவை விட நம்மிடமிருந்து 400 மடங்கு தொலைவில் இருக்கிறது. அதனால் தான் சூரியனும் நிலாவும் ஒரே அளவாகத் தெரிகிறது.
சூரியகிரகணம்: நிலா ஒரு முறை பூமியை சுற்றி வர 30 நாட்கள் ஆகும். அதனால் தான் அம்மாவாசை பெளர்ணமி நிகழ்கிறது. நிலாவின் சுற்றுப்பாதை பூமிக்கு ஒருபுறமாக சாய்ந்து உள்ளதால் ஒவ்வொரு முறையும் சூரியகிரகணம் நிகழ்வதில்லை. நிலாவில் சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் நேர்க்கோட்டில் சந்திக்கும் போது தான் கிரகணம் நிகழும். நிலா சூரியனை மறைக்கும் போது கருநிழல் (அம்ரல்), மற்றும் எதிர்நிழல் (பெனம்ரல்) என இருவித நிழலாக பூமியின் மீது விழுகிறது. பூமியில் இருக்கும் இடத்தைப் பொருத்தே சூரியகிரகணத்தின் மறைவு அமைப்பை பார்க்க முடியும். நான்கு மறைவு அமைவுகளாக சூரியகிரகணம் (Solar Eclipse) நிகழ்கிறது.
பகுதி கிரகணம்: சந்திரனின் கருநிழல் பூமியில் விழும் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டு இருக்கும். இது முழுமையான கதிரவ மறைப்பாகும். எதிர்நிழலில் பகுதியிலிருந்து பார்த்தால் சூரியனின் ஒரு பகுதி மட்டும் நிலாவால் மறைக்கப்படுவதைப் பார்க்கலாம். இதற்கு பகுதி கிரகணம் என்று பெயர். Necro Trojan Malware Attack: 11 மில்லியன் ஸ்மார்ட்போன்களுக்கு ஆப்பு; நீக்ரோ வைரஸ் பாதிப்பு உறுதி; சைபர் பாதுகாப்பு நிறுவனம் உச்சகட்ட எச்சரிக்கை.!
கதிரவ மறைப்பு: நிலாவின் சுற்றுப்பாதை ஒரு பக்கம், மறுபக்கத்தை விட பூமியிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. அப்படி தள்ளி இருக்கும் பகுதியிலிருந்து சூரியனை மறைத்தால் நிலா சற்று சிறிதாகத் தோன்றி சூரியனை வளையமாக தெரியவைக்கும். இது வளைய வடிவ கதிரவ மறைப்பாகும். இது அரிதான கலப்பு கதிரவ மறைப்பு நிகழ்வாகும். இதில் பூமியின் ஒருபக்கம் முழுகதிரவ மறைப்பும், மறுப்பக்கம் வளைய கதிரமறைப்பும் பார்க்க முடியும்.
சூரிய கிரகணம் எப்போது?: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி புதன் கிழமை அன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9.12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணிக்கு நிறைவடைகிறது. நெருப்பு வளையம் (Ring of fire) போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலையானது நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படுகிறது. இதனை தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க இயலும். வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியாவது பார்க்கலாம். இரவு நேரத்தில் கிரகணம் ஏற்படுவதால், இந்தியா, ஆசியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க இயலாது.