செப்டம்பர் 29, புதுடெல்லி (Technology News): தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு பின்னர் ஸ்மார்ட்போன்கள் இன்று ஒவ்வொருவரின் கையிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்களில் விற்பனை என்பது அதிகரித்துவிட்ட நிலையில், அதில் பயன்படுத்தப்படும் செயலிகளும் புதுப்புது தன்மையுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு சில நேரங்களில் சைபர் குற்றவாளிகள் இதனை தங்களது சாதகமாக பயன்படுத்தி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவது, அவர்களின் வங்கிக்கணக்கை பயன்படுத்தி கொள்ளையடிப்பது, மோசடி செயல்களை அரங்கேற்றுவது, உலகளாவிய சிக்கலை ஏற்படுத்துவது என சர்ச்சை செயல் தொடர்ந்து வருகிறது.
சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வில் உறுதி:
இந்நிலையில், உலகளவில் சுமார் 11 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நீக்ரோ லோடர் (Necro Trojan Loader Malware) என்ற வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது மாடிஃபைடு செய்யப்பட்ட ஆப்-கள் மற்றும் கேம்களில் இருந்து பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பை உறுதி செய்யும் காஸ்பெர்ஸ்கை நிறுவனம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், அதிர்ச்சி தரும் தகவல் அம்பலமாகியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பிரதானமாக பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் இவ்வாறான வைரஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. Happy Birthday Google: "ஹேப்பி பர்த்டே கூகுள்.." இன்று 26வது பிறந்தநாள் கொண்டாடும் கூகுள்.!
பாதிப்பு கண்டறியப்பட்டு நீக்கினாலும் பாதிப்பு தொடர்ச்சி:
ஆப்களை டவுன்லோட் செய்வது அல்லது அதன் லிங்குகளை தொடடுவது போன்றவை, ஆப்களை இன்ஸ்டால் செய்வது ஆகிய காரணத்தால் செல்போன் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. இது பணம் கொடுத்து சேவையை பெற்று வரும் பயனர்களையும் விட்டு வைக்கவில்லை. மினி கிராப்ட், ஸ்பாட்டிபை, வாட்ஸ் அப் போன்ற செயலிகளிடம் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வுட்டா கேமரா செயலியில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அந்நிறுவனம் வைரஸை கண்டறிந்து நீக்கினாலும், இணையவழியில் இந்த வைரஸ் தாக்குதல் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு:
ஸ்மார்ட்போன்களில் பழைய செயலியை புதிய செயலியாக மாற்றும் முயற்சியின் போது, அதற்கான அப்டேட்களை நிறுவும் போது, கூடுதல் சிறப்பம்சங்கள் வழங்கப்படும் நிலையில், இந்த வைரஸ் அதனை தாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 11 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கூகுள் நிறுவனத்தால் உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாம் தர செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காஸ்பெர்ஸ்கை நிறுவனமும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. அதனை சரிசெய்யும் பணியிலும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.