Kid (Photo Credit: Pixabay)

மார்ச் 07, சென்னை (Technology News): பணத்தின் மதிப்பு உழைக்கிறவங்களுக்கு தான் தெரியும் என்று வீட்டில் இருப்பவர்களையும், குழந்தைகளை திட்டிவதற்காக அனைவரும் எளிமையாக பயன்படுத்துவர். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பு தெரியவில்லை என்றால் அதற்கு காரணம். சிறுவதிலிருந்தே பணத்தின் மதிப்பைப் பற்றி சரியாக கற்றுக் கொள்ளாததே. இவ்வாறு திட்டுவதை விடுத்து குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பணத்தின் மதிப்பையும் அதை எவ்வாறு கையாள வேண்டும் என சொல்லித் தர வேண்டும். அனைவருக்குமே பணத்தின் மதிப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

பணம் தரலாமா?

குழந்தைகள் கையில் பணத்தைக் கொடுக்கக் கூடாது, அது அவர்களை பொறுப்பில்லாதவர்களாக மாற்றிவிடும் என ஒரு பொதுவான கருத்து உள்ளது. அது ஒரு வகையில் உண்மைதான் அவர்கள் அதிகம் பணத்தை தேவையில்லாத பொருட்களுக்கு செலவழிக்கக்கூடும். அதே சமயம் அவர்கள் பணத்தைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. அதனால் மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை, குழந்தைகளுக்கு பாக்கெட் மணியாக அளிக்க வேண்டும். அந்த தொகையை வைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க சொல்லலாம். அவைகள் தேவையான பொருட்கள் தான என கண்காணிப்பிலே இருக்க வேண்டும். மீதப் பணத்தை உண்டியலில் சேமிக்க பழக்கப்படுத்த வேண்டும். சேமிப்பதால் பணம் சிறிது சிறிதாக வளரும் எனக் கற்றுக் கொள்வர்.

சேமிப்பு அத்தியாவசியம்

நம்முடைய கலாசாரத்தில், பெரியவர்கள் நீண்ட நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பணம் அளித்து ஆசீர்வாதம் செய்வது வழக்கம். அதை சேமித்து வைக்கவோ அல்லது பிடித்ததை வாங்கி கொள்ளுமாறும் தருவார்கள். குழந்தைகள் அதை வாங்கி பெற்றோரிடம் தான் தருவார்கள். குழந்தைகளுக்கு அந்த பணத்தை சேமித்து வைக்க பழக்கப்படுத்த வேண்டும்.

அதோடு விலை அதிகமான பொருட்களை குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காக உடனே வாங்கி தராமல் அவைகளை அவர்களின் பாக்கெட் மணிகளின் சேமிப்பிலிருந்து எடுத்து வாங்கிக் கொள்ள பழக்கலாம். இதனால் பொறுமையாக இருந்து சேமிப்பதால் அதில் கிடைக்கும் பெரிய பயனையும் சேமிப்பின் அவசியத்தை அறிந்து கொள்வர். சேமிப்பை மேற்கொள்வதைக் குறித்தும் எடுத்துக் கூற வேண்டும். பாக்கெட் மணி முழுவதையும் சேமிக்ககாமல், ஒரு 40 சதவீதத்தை சேமிப்பதால் விரைவில் பலன் கிடைக்கும் எனக் கற்றுக் கொடுங்கள். தேவைப்படுவதற்கு மட்டும் செலவழிப்பதால் அனாவசியமாக செலவழிக்கக் கூடாது என்றும் கற்றுக் கொள்வர். குழந்தைகளின் வயதிற்கேற்ப அவர்களுக்கான பாக்கெட் தொகை, ரிவார்டு தொகை, பரிசி தொகையை அதிகப்படுத்துங்கள். Share Market: பங்குசந்தையில் உள்ள நன்மைகள் தீமைகள்.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

கடன் அளியுங்கள்

குழந்தைகளுக்கு கடன்கள் பற்றியும் அவைகளை சரியாக கட்டுவது போன்ற வழிமுறையும் சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்கள் விருப்பப்படும் பொம்மைகள், மொபைல், லேப்டாப், அல்லது படத்துக்கான டிக்கெட், பள்ளி, கல்லூரி டூர்களுக்கான தேவைப்படும் தொகையை சேமித்து வைக்க பழக வேண்டும். சேமிப்பைத் தாண்டியும் அவர்களுக்கு பணத்தேவை இருக்கும் போது அவர்களுக்கு கடனக பணத்தை அளிக்கலாம். மேலும் கடனை அவர்களின் பாக்கெட் மணியை சேமித்து வைத்து அவைகளை திருப்பித்தர கூறலாம். மேலும் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தர வேண்டும் எனக் கூற வேண்டும். அந்த காலத்தை தாண்டி திருப்பி தாராமல் இருக்கையில் குறைவான வட்டியை விதித்து வட்டி எவ்வாறு கட்ட வேண்டும் அசல் எப்படி அடைக்கலாம் என சொல்லிக் கொடுங்கள். பிற்காலத்தில் குழந்தைகளுக்கு கடன் வாங்கினால் எவ்வாறு பொறுப்பாக கடன்களை கையாள பழகுவார்கள். மேலும் கடன்கள் இருந்தாலும் பாக்கெட் மணியில் ஒரு பங்கு தொகையை சேமிப்பதையும் பழக்கப்படுத்த வேண்டும்.

உழைப்பு ஏற்ற ஊதியம் அளியுங்கள்

உழைக்கும் போது தான் பணத்தின் அருமை புரியும். குழந்தைகள் உங்களுக்கு உதவி செய்தால் அவர்களுக்கு அதற்கான பரிசை அளியுங்கள். குழந்தைகள் வேலைக்கு செல்லும் வயதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர். வேலைக்கு செல்வதையும் வெறுக்கின்றனர். பலர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இது போன்றவைகளை தவிர்க்க குழந்தைகளுக்கு வேலை செய்வதன் அவசியத்தையும் உணர வைக்க வேண்டும். சொந்தமாக நிறுவனம் வைத்திருந்தால் வாரம் ஒரு முறை அழைத்து சென்று சிறிய வேலைகளை அளிக்கலாம்.

மேலும் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்தால் அவர்களுக்கு சிறிய அளவு தொகையை ரிவார்டாக கொடுங்கள். இது நல்ல செயல்கள் செய்ய ஊக்குவிக்கும்.

முதலீடு

எவ்வளவு சிறு வயதிலேயே முதலீடு செய்வதை ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு பலன் உள்ளது என்பது பல முன்னணி முதலீட்டாளர்கள் கூறும் அறிவுரையாக உள்ளது. குழந்தைகளுக்கு முதலிடுவதன் நன்மைகளை செல்லித் தர வேண்டும். அதற்காக பங்கு சந்தையில் இறக்க சொல்லவில்லை. நம்மில் பல பெரியவர்களுக்கும் தெரியாத முதலீட்டை சொல்லித் தர வேண்டும். முதலீடு செய்வதால் பணம் சிறிது சிறிதாக பெருகி வளர ஆரம்பிக்கும் என சொல்லித் தர வேண்டும். நீங்கள் சுயமாக தொழில் நடத்தி வந்தால் அதில் குழந்தைகளின் பணத் தொகைகளை முதலீடு செய்து அவர்களின் பங்கிற்கு பிறகு லாபமோ நஷ்டமோ அவர்களுடைய தொகைக்கான பங்கினை எடுத்துத் தாருங்கள். இது முதலீட்டு மனப்பான்மையை அதிகரிக்கும். நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டை நன்மைகளை கற்றுக் கொடுங்கள்.

சரி செய்யுங்கள்

பண விஷயத்தில் பெரியவர்களே கணக்கில் கோட்டை விடும் போது குழந்தைகள் பணத்தை கையாள சற்று சிரம்மப்படுவர். அவர்கள் செய்யும் தவறுகளை எடுத்துக் கூறுங்கள் அதற்கு பதிலாக என்ன செய்யலாம் என அறிவுரை வழங்குங்கள். எவ்வாறு பணச் சிக்களை சமாளிக்க வேண்டும் என வழிகாட்டுங்கள். பட்ஜெட் போடுவது எப்படி என சொல்லிக் கொடுத்து அவைகளை கண்காணியுங்கள். அவைகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பணத்தை பயன்படுத்துகையில் அவர்களின் சரி தவறுகளை எடுத்துக் கூற வேண்டும்.

குடும்பமாக இருங்கள்

பணத்தின் அவசியம் கூறுவதைப் போன்றே குடும்பமாக இருப்பதையும் விதையுங்கள். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்து பணத்தின் அருமை சேமிப்பு, செலவு, முதலீடு என சொல்லித் தருவதால் மணி மைண்டாக குழந்தை வளரவும் வாய்ப்புள்ளது. அதனால் சமூகத்தில் பணத்தேவை இருப்பதால் தான் இவைகள் செய்ய வேண்டும். இதை தவிர்த்து எப்போதும் குடும்பம் முக்கியம் என புரிய வைக்க வேண்டும். குடும்பத்தில் அதிக பணத் தேவை இருக்கும் பட்சத்தில் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்க்க வேண்டும். பணக் கஷ்டம் ஏற்படும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தாருங்கள்.