
பிப்ரவரி 21, சென்னை (Technology News): பங்கு சந்தை, பணக்காரர்களுக்கானது என்ற பிம்பம் மறைந்து பலரும் இதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் தனி நபர், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் போன்ற அனைவரும், முதலீடு செய்து வருகின்றனர். பங்கு சந்தையில் லாபம் கிடைப்பது போன்று சற்று ரிஸ்குகளும் உள்ளது. Comment Addiction: சமூக ஊடகங்களில் இருக்கிறீர்களா? உங்களுக்கு கமெண்ட் ரீட் பண்ணும் பழக்கம் இருக்குமே? அப்போ வாங்க.!
பங்குசந்தையில் உள்ள நன்மைகள்:
- பங்கு சந்தையில் சரியான இடத்தை தேர்வு செய்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். பங்கு சந்தையில் எந்த உத்திரவாதம் இல்லையென்றாலும் பத்திர சொத்துக்கள், வங்கி சேமிப்புகளை விட இதில் அதிக வருமானம் கிடைக்கும்.
- பங்கு சந்தை, ரிஸ்க் என்பதால் பணம் முதலீடு செய்வதால் எப்போதும் நஷ்டம் மட்டுமே ஏற்படும் என்று அர்த்தமில்லை. முதலீட்டை இழப்பது என்பது சில நேரங்களில் மட்டுமே ஏற்படும். இதனால் முதலீட்டை எப்போதும் ஒரே நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்யாமல், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கும் நடைமுறையாகும்.
- பங்கு சந்தையில் பணத்தை எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும்.
- முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வுத் தன்மை மற்றும் சந்தை மாற்றங்கள் அல்லது தனிப்பட்ட நிதி தேவைக்காக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
- பங்குசந்தையில் நிறுவனங்கள் மீது முதலிடும் போது முதலீட்டாளர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். இதனால் நிறுவனர்த்தின் செயல்பாடுகளிலும், நிறுவனத்தின் லாபத்திலும் பங்கு பெறலாம்.
- பங்குச் சந்தை எளிமையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது நிதி நிறுவங்கள் மூலமும் முதலீடு செய்யலாம்.
- பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்தை கூட்டு வட்டி மூலம் மீண்டும் முதலீடு செய்வதால் அதிக லாபம் பெற முடியும்.
பங்கு சந்தை ரிஸ்க்குகள்:
- முதலீடு செய்வதில் அதிக ஆபத்துக்கள் கொண்டது இந்த பங்கு சந்தை தான். குறுகிய காலத்தில் முதலீட்டிற்கு லாபம் எதிர்ப்பார்க்க முடியாது. இது குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
- பங்கு சந்தை, முதலீடு தனிபட்ட முறையில் செய்வதாக இருந்தாலும் கண்டிப்பாக ஆலோசரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.
- தனிச்சையாக பங்கு சந்தையில் எளிதில் லாபம் பார்க்க முடியாது.
- மியூச்சுவல் பண்ட் நிதி நிறுவனங்கள் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செயாதாலும், எதில் முதலிடு செய்கிறோம், அதன்நிறுவனம் சரிய்டானதா என் எப்போதும் கவனிக்க வேண்டும். நிதி நிறுவனங்களை முழுவதுமாக நம்பி மட்டுமே மதலீடு செய்யக்கூடாது.
- பங்கு சந்தையில், நீண்ட கால முதலீடு தானே பிறகு பார்த்துக் கொள்வோம் என அப்படியே கண்டுக்காமல் விட்டுவிடக் கூடாது. அவ்வப்போது சந்தை நிலவரங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- நிறுவன ஊழல்கள் அவ்வப்போது நடைபெறும். இது போன்ற செயல்களில் சில நிறுவனங்கள் ஈடுபடும். முதலீடு செய்வதற்கு முன்பே நிறுவனங்களை பற்றி நன்கு அறிந்து கொண்டு பின் முதலிடுவது நல்லது.
- சட்டங்கள், ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் அல்லது அரசியல் உறுதியற்ற தன்மை போன்ற அரசியல் மற்றும் ஒழுங்கு முறை அபாயங்களால் பங்குசந்தை பாதிக்கப்படக்கூடியது. இதனால் ஏற்ற இறக்கங்கள் சரிவுகள் ஏற்படும். மேலும் பல சட்டம் சார்ந்த அபாயங்களும் ஏற்படும்.