ஏப்ரல் 18, டெல்லி (Delhi): இந்தியாவில் பிரதான உணவு டெலிவரி நிறுவனமாக இருப்பது சோமெட்டோ (Zomato). வீட்டில் இருந்தபடி தங்களுக்கு தேவையான உணவை செயலின் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில், வீட்டிற்கு வந்து அது நேரடியாக டெலிவரி செய்யப்படும். அதேபோல, நாம் ஆர்டர் கொடுத்த 30 முதல் 40 நிமிடங்களுக்குள், உணவு கைக்கு வரும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். பல்வேறு செயலிகள் ஆன்லைன் உணவு டெலிவிற்காக செயல்பட்டு வருகிறது எனினும், சோமெட்டோ அதிக பயனர்களை கொண்டது ஆகும். இதற்காக ஒவ்வொரு நகரிலும் பிரத்தியேகமாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். Market Crash: தொடர்ந்து 4வது நாளாக.. பெரிய அளவில் சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை..!

இந்நிலையில் பார்ட்டிகள் மற்றும் வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளுக்கான பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட் (large order fleet) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. சோமேட்டோ கொண்டுவரும் இந்த புதிய சேவைக்கு வேண்டி டெலிவரி வாகனம் அனைத்தும் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த உள்ளது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஃப்ளீட் ஆனது 50 பேர் வரை கொண்ட விருந்துகளுக்காகப் பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.