அக்டோபர் 04 (Technology News): உலகமெங்கும் பல நாடுகளில் வாட்ஸ ஆப்-பில் (Whats App) சேனல் (Channel) வசதி அறிமுகமானது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுடன் இணைப்பில் (Connect) இருக்க இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கிறது.
வாட்ஸ ஆப்-பில் சேனல்கள் அம்சம் அறிமுகமானதிலிருந்து பயனாளர்களுக்கு குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்களை (Status) காண்பது சிரமமாக இருப்பதாக கூறப்பட்டது. அதனால் பயனாளர்கள் கருத்துக்களின் அடிப்படையில் ஸ்டேட்டஸ் பக்கத்தில் தேடுதல் அம்சத்தை (Search Option) வாட்ஸ ஆப் நிறுவனம் இணைத்திருக்கிறது. E-bike battery exploded: தீப்பந்து தாக்குதலில் இருந்து தப்பித்த இரண்டு வாலிபர்கள்.! காண்போரை மிரள வைக்கும் வீடியோ.! சிட்னியில் நடந்த பயங்கரம்.!
ஆண்ட்ராய்டு மொபைல் (Android) போன் உபயோகிப்பவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google Playstrore) பீட்டா (Beta) வசதி இருக்கும் பட்சத்தில் இந்த புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாட்ஸ ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களின் ஸ்டேட்டஸ்களை எளிதில் தேடிக்கொள்ள முடியும்.
மேலும் இந்த தேடுதல் அம்சம் சேனல்களிலும் இணைக்கப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம் நிறைய சேனல்களை பின்பற்றுபவர்களுக்கு, இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.
வாட்ஸ ஆப்-பில் சேனல்களில் இருக்கும் மீடியா பதிவுகள் (Media files) தாமாகவே டெலிட் ஆகும் அம்சதத்தையும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு மீடியாவில் இருக்கும் பதிவுகள் நீடித்திருக்கலாம் என்பதையும் பயனாளிகள் தேர்ந்தெடுக்க முடியும். இந்த வசதி அடுத்த அப்டேட்டில் (Update) கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.