
மார்ச் 20, சென்னை (Technology News): இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் கூகுள் பே, போன்பே (PhonePe) மூலம் பணப்பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய பணப்பரிமாற்ற கார்ப்பரேஷன் இந்தியா எனப்படும் என்பிசிஐ (NPCI) புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. Sunita Williams Return: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. சாதனை படைத்த நாசா..!
வங்கிக் கணக்கு முடக்கம்:
புதிய விதிமுறை, வரும் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த விதிமுறையில், ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கும் போது இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே (G Pay), போன் பே-வின் யுபிஐ ஐடிகளோ முடக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தவிர்ப்பது எப்படி?
இதனைத் தவிர்க்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அனைவரும், தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் என்ன என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவும். அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு, தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான், வங்கிக் கணக்கு பாதுகாப்பாக செயல்படும்.