Instagram Reels (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, சான்பிரான்சிஸ்கோ (Technology News): பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடலாம் என்ற புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம். இளையதலைமுறையினர், திரையுலகத்தினர், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் 90 விநாடிகள் கொண்ட ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவை வெளியிடலாம். அதற்கு மேலான கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட முடியாது. CVV Number: டெபிட் கார்டுகளின் பின்னால் இருக்கும் சிவிவி எண்.. முக்கியத்துவம் என்ன?!

3 நிமிட ரீல்ஸ்:

ஆனால், இனி அந்த கட்டுப்பாடு கிடையாது. 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் (Instagram Reels) வீடியோக்களை பதிவிடலாம் மற்றும் பகிரலாம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசைரி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, மேலும் அவர் கூறுகையில், பயனர்கள் அதிகபட்சம் 3 நிமிடங்கள் கால அளவு கொண்ட வீடியோக்களை பதிவிடலாம் என தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிகிறது.