Sunita Williams (Photo Credit: @ndtv X)

மே 07, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை தான் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams). இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக இப்போது விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். World First 6G: 6 ஜி 100 ஜிபிபிஎஸ் நெட்ஒர்க்கை செயல்படுத்தும் 6ஜி சாதனம்; மாஸ் காட்டிய ஜப்பான்.! விபரம் உள்ளே.!

இந்தச் சூழலில் அவர் பயணிக்க இருந்த ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி நிமிடத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர். உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.