Tata Consultancy Services (Photo Credit: @indianweb2 X)

ஜனவரி 15, மும்பை (Technology News): இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த 2025ஆம் ஆண்டு 40 ஆயிரம் பயிற்சி பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கடந்த ஜனவரி 10ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மிலிந்த் லக்காட் (Chief HR Milind Lakkad), அடுத்த ஆண்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Best Investment Options: உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்? லாபத்தை அள்ளி கொடுப்பது எது தெரியுமா? விபரம் உள்ளே.!

பணியாளர் சேர்க்கை:

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. அதிலிருந்து, ஒரு நாளைக்குப் பிறகு இந்த பணியாளர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளியான நிதிநிலை அறிக்கையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 5370 ஆகக் குரைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 3வது காலாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 6,07,354 ஆக குறைந்தது. இந்த எண்ணிக்கை 2வது காலாண்டின் இறுதியில் 6,12,724 ஆக இருந்தது. 2024 முதல் 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

வளர்ச்சி பாதையில் டிசிஎஸ் நிறுவனம்:

இந்நிலையில், பணியாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை 12.3 சதவீதமாக உயர்ந்ததாகவும், இது நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாகவும் மிலிந்த் கூறினார். அதிகளவிலான பணி நீக்கங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐடி துறை மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. மேலும், டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்த இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி வேலைக்கு தயாராகும் நபர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று பல்வேறு அறிக்கைகளும் வெளியாகியுள்ளது.