ஜூலை 08, சென்னை (Technology News): ஹானர் நிறுவனம் தனது ஹானர் எக்ஸ்70 (Honor X70 Smartphone) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 15ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. தொடர்ந்து, ஜூலை 24ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இந்த போனின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Pura Mitra App: 3 நாட்களில் தீர்வு.. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஆப்.!
ஹானர் எக்ஸ்70 சிறப்பம்சங்கள் (Honor X70 specifications):
- இதில், 6.79-இன்ச் FHD பிளஸ் 1.5கே டிஸ்பிளே வசதியுடன், 2640×1200 பிக்சல்ஸ், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2.3ஜிகாஹெர்டஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும்.
- கேமிங் பயனர்களுக்கு அட்ரினோ 810 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும். OIS ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா அமைப்புடன், 8எம்பி செல்பி கேமரா வசதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேஜிக்ஓஎஸ் 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய ஹானர் எக்ஸ்70 போனில் உள்ளன.
- ரெட், பிளாக், ப்ளூ நிறங்களில் ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி பொறுத்தவரை, 8300mAh பேட்டரியுடன், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜ் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.