ஜூலை 07, ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் புரமித்ரா என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை ஸ்மார்ட்போனில் புகைப்படங்களாக எடுத்து ஆப் மூலமாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். ஆபத்தான சிகிசை முறை.. 700 பேரின் உயிரை காவு வாங்கிய பகீர் சம்பவம்.!
24 மணிநேரத்தில் ஆய்வு :
இந்த விஷயத்துக்கு நகராட்சி ஊழியர்கள் சுமார் 24 மணி நேரத்திற்குள் ஆய்வு ஒன்றை நடத்தி அந்த பிரச்சனையின் தன்மை குறித்து மக்களிடம் கருத்து கேட்பார்கள். அதனை தொடர்ந்து சிறிய பிரச்சனைகள் என்றால் அதனை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைத்து விடுவார்கள். பெரிய அளவிலான பிரச்சனைகள் என்றால் அந்த பிரச்சனைக்கு தீர்வு 3 நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் கிடைக்கும்.
3 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு :
இதன் மூலமாக கடந்த மூன்று மாதங்களில் 10,421 பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இந்த விஷயங்களில் 9,889 பிரச்சனைகளுக்கு தீர்வும் ஏற்பட்டு இருக்கிறது. புரமித்ரா செயலியில் பெறப்படும் புகார்களுக்கு உரிய காலக்கெடுவில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், அந்த விஷயத்துக்கு முழு அளவிலான பொறுப்பு அதிகாரிகளே என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி அதிகாரிகள் உடனுக்குடன் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர்.