டிசம்பர் 15, டெல்லி (Delhi): தொழில்நுட்பங்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்துக் கண்டறிந்து கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In) என்ற அமைப்பு பொதுவாக எச்சரிக்கை விடுக்கும். தற்போது இந்த அமைப்பு சாம்சங் மொபைலில் இருக்கும் சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாம்சங் சாதனங்களில் குறைபாடு: சாம்சங் மொபைலில் இருக்கும் ஆன்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 வெர்ஷன்களில் இந்த முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதை ஆபத்தை CIVN-2023-0360 என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மூலம் மொபைலை ஈஸியாக ஹேக் செய்ய முடியும். எனவே இதனை ஹை ரிஸ்க் ஆபத்து என்று CERT பட்டியலிட்டுள்ளனர். இந்த ஆபத்துகள் கேலக்ஸி எஸ் 23 சீரியஸ், கேலக்ஸி ப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்ட் 5 உட்பட பல சாம்சங் மொபைல்களில் கண்டறியப்படுவதாகவும் எச்சரித்துள்ளனர். Money Plant: அதிர்ஷ்டம் தரும் மணி பிளாண்ட்... வெறும் தண்ணீரில் வளர்ப்பது எப்படி?..!
எச்சரித்த மத்திய அரசு: இதனால் சாம்சங் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் செக்யூரிட்டி அப்டேட்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் பதிவிறக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் மெசேஜ்கள் மற்றும் இமெயில்களில் வரும் தேவையில்லாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In)அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.