POCO F6 Deadpool Edition (Photo Credit: @Sudhanshu1414 X)

ஜூலை 26, சென்னை (Technology News): போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஸ்பெசல் எடிசன் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போக்கோ எப்6 டெட்பூல் எடிசன் ஸ்மார்ட் போன் (POCO F6 Deadpool Edition Smart Phone) சமீபத்தில் வெளியான டெட்பூல் மற்றும் வால்வரின் திரைப்படத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது டெட்பூல் மற்றும் வால்வரின் பின்புறத்தில் 3D தோற்றத்தைக் கொண்டுள்ளது, இதனுடன் இதன் கேமரா லைட்டில் Deadpool லோகோ கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன், ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் Flipkart-யில் விற்பனைக்கு வரும். இது 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒற்றை வேரியண்ட் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். Diamonds In Mercury: என்னது இவ்வளவு வைரமா! கிரகம் முழுவதும் கொட்டு கிடக்கும் வைரம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

சிறப்பம்சங்கள்:

போக்கோ எப்6-யில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதிலும் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உடன் வருகிறது.

சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi Hyper OS) உடன், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8s Gen 3 4nm, சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு உடன் வருகின்றது.

இது ஒரே வேரியண்ட்டில் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50MP மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. டெட்பூல் எடிஷனில் Omni Vision OV20B சென்சார் கொண்ட 20MP செல்பி கேமரா வருகிறது.

இதில், 5000mAh பேட்டரி திறன் கொண்ட, 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.