Salesforce Logo (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 01, சான் பிரான்சிஸ்கோ (Technology News): உலகளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று சேல்ஸ்போர்ஸ் (Salesforce) நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப், நிறுவனத்தில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, வாடிக்கையாளர் உதவிக்கு பணியாளர்களாக இருந்த 9,000 பேரில், தற்போது 5,000 பணியாளர்களாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஏஐ தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் கவரில் பணத்தை வைக்கும் நபரா நீங்கள்?.. இந்த தவறை மறந்தும் செஞ்சிடாதீங்க.!

4 ஆயிரம் பேர் பணிநீக்கம்:

சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பத்தை தனது நிறுவனத்தில் பெரியளவில் பயன்படுத்த தலைமை நிர்வாக அதிகாரி மார்க் பெனியோப் முடிவு செய்தார். இந்நிலையில், 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம், வாடிக்கையாளர் சேவை மட்டுமின்றி, விற்பனை நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து, நிறுவனத்தின் சிஇஓ மார்க் பெனியோப் கூறுகையில், தனது நிறுவனத்தில் கடந்த 26 ஆண்டுகளில் 1 கோடியே 10 லட்சம் அழைக்கப்படாத விற்பனை அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்கான போதுமான பணியாளர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி திறன் அதிகரிப்பு:

தற்போது, ஏஐ மூலம் 'ஒம்னிசேனல் சூப்பர்வைசர்' என்ற அமைப்பு மூலம் ஏஐ மற்றும் ஊழியர்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த மாற்றத்தால், விற்பனை செயல்முறையை சிறப்பானதாக மாற்றி, விற்பனையை விரைவாகவும், நிறுவனத்தின் உற்பத்தி திறனை உயர்த்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவையில் 50% ஏஐ தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. மீதமுள்ள 50% மனித ஊழியர்கள் நிர்வகிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.