செப்டம்பர் 10, ஆஸ்டின் (Technology News): அமெரிக்காவை தளமாக கொண்ட டெக் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) சுமார் 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. புதிய பணிநீக்க நடவடிக்கை அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள ஊழியர்களைப் பாதித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தால் ஏற்பட்ட பணிநீக்கங்கள், சுகாதாரம், வாடிக்கையாளர்கள் ஆதரவு மற்றும் கிளவுட் பிரிவுக்கு அப்பால் உள்ள பிற பிரிவினைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. TVS Ntorq 150: டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!
ஆரக்கிள் பணிநீக்கங்கள்:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய இந்த பணிநீக்கங்களில், அமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் ஹெல்த் பிரிவில் உள்ள ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டனில், ஆகஸ்ட் மாதத்தில் 161 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு, சியாட்டிலில் மேலும் 101 பணிநீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில், தொழில்நுட்பம் மற்றும் ஆதரவுப் பிரிவுகளில் உள்ள 100 ஊழியர்கள், இந்த வாரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் தொடர்ச்சியான மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதிலும், செயல்திறனை மேம்படுத்துவற்கும் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆரக்கிள் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் சம்பளம் வழக்கப்படும். மேலும், ஒரு வருட மருத்துவ காப்பீடு வழக்கப்படும்.