ஆகஸ்ட் 04, சென்னை (Technology News): விவோ நிறுவனம் அதன் புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனை (Vivo Y400 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Instagram Update: இனி இன்ஸ்டாவில் 1000 பாலோவர்ஸ் இருந்தால் மட்டும் தான் இந்த வசதி.. பயனர்களுக்கு ஷாக்.!
விலை மற்றும் கிடைக்கும் தன்மை (Vivo Y400 5G Price):
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் - ரூ. 21,999.
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் - ரூ. 23,999.
- இந்த ஸ்மார்ட்போன் ஆலிவ் க்ரீன் மற்றும் கிளாம் ஒயிட் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. வரும் ஆகஸ்ட் 07ஆம் தேதி முதல் விவோவின் ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும்.
விவோ ஒய்400 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo Y400 5G specifications):
- இதில், 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே உடன், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும், 1800 நைட்ஸ் உச்ச பிரகாசத்தை வழங்குகிறது.
- விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கேமரா பொறுத்தவரை, பின்புறத்தில், 50MP சோனி IMX852 முதன்மை கேமராவுடன் 2MP டெப்த் சென்சார் உள்ளது. செல்பிக்கு 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 6,000mAh பெரிய பேட்டரியுடன், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது, IP68 மற்றும் IP69 ஆகிய நீர் மற்றும் தூசி எதிர்ப்பு தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.