Instagram (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 04, சென்னை (Technology News): ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில், இளம் சமூகத்தினர் இடையே ஆதிக்கம் செலுத்தி வரும் செயலியாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை இருக்கிறது. இதில் இன்ஸ்டாகிராம் தான் பிற அனைத்து செயலிகளை விட கூடுதல் பயனர்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கூட அதிக 2k கிட்ஸ் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் கணக்கீட்டில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் :

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பலரும் தற்போது பிரபலங்களாக மாறிவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 40 கோடி மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 17 கோடி பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.! 

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் அப்டேட் :

அதன்படி இன்ஸ்டாகிராமில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மெட்டா நிறுவனம் லைவ் வசதியை அனைவரும் இனி பயன்படுத்த முடியாது என்ற விதிமுறையை கொண்டு வர இருக்கிறது. இதனால் குறைந்தபட்சம் 1000 பின்தொடர்பாளர்களை கொண்ட நபர்கள் இனி லைவ் வீடியோ பதிவு செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.