Vivo Y400 5G (Photo Credit: @Technifyzer X)

ஜூலை 23, சென்னை (Technology News): விவோ தனது புதிய விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனை (Vivo Y400 5G Smartphone) வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விவோ போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான அம்சங்களை இப்பதிவில் காண்போம். Lava Blaze Dragon: பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்.. லாவா பிளேஸ் டிராகன் விவரம் இதோ..!

விவோ ஒய்400 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo Y400 5G specifications):

  • ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப் உடன், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும்.
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ரோம் வசதியுடன் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதில், IP68/69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் உள்ளது.
  • விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனில், 6000mAh பேட்டரி வசதியுடன், 90W ஃபாஸ்ட சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் க்ரீன் (Olive Green), கிளாம் ஒயிட் (Glam White) நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. விலையை பொறுத்தவரை, ரூ.20,000 பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.