WhatsApp File Picture (Photo Credit: Pixabay)

ஜனவரி 11, புதுடெல்லி (New Delhi): இன்று அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் முதலிடம் வகிக்கிறது. இப்போது வாட்ஸ் அப் (WhatsApp) அலுவலகம், குடும்பம் என பல குழுக்களைக் கொண்டுள்ளது. அதில், நண்பர்கள் குழுக்கள் பொதுவாக எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பார்கள். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் தனிப்பட்ட மட்டுமல்ல, தொழில்முறை வேலைகளுக்காகவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. Child Abuse: விடுதியில் தங்கிபயின்ற 14 வயது மாணவிக்கு பிரசவம்.. காரணம் யார்?.. சல்லடைபோட்டு தேடும் அதிகாரிகள்.!

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: இந்நிலையில் வாட்ஸ் அப்பில் புதிதாக ஐந்து நிறங்களில் தீம்களை கொண்டு வரவுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நோடிபிகேஷனைத் (Notification) பயனர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள முடியும். இந்த தீம்கள் பச்சை, நீலம், வெள்ளை பிங்க், ஊதா ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின் பயனர்களுக்கு ஏற்றவாறு பல கலர்களை சேர்க்கவும் பரிசீலித்து வருகிறது. தற்போது இந்த அப்டேட் பீட்டா சோதனையில் உள்ளது.