Wikipedia | Delhi HC (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 05, புதுடெல்லி (New Delhi): தமது நிறுவனம் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தது. மேலும், அவதூறு செய்தி (ANI defamation case) வெளியிட்டதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றது. அதாவது போலி செய்தி இணையதளங்களில் இருந்து ஏராளமான தகவல்களை ஏஎன்ஐ வழங்குவதாக விக்கிபீடியா கூறியது. இந்த வழக்கில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் மனுவுக்கு விக்கிபீடியா பதில் அளிக்குமாறு முன்னர் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விக்கிபீடியா தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. Sexual Assault On Tribal Woman: பழங்குடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. வெடித்த வன்முறை..!

இதனைத் தொடர்ந்து, ஏஎன்ஐ மீடியா பிரைவேட் லிமிடெட் கொண்டு வந்த அவமதிப்பு மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிப்பீடியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவில்லை என்றால், அவமதிப்பு சுமத்துவதுடன், அதைத் தடைசெய்யவும் அரசாங்கத்தை கோருவேன் என்று நீதிபதி நவீன் சாவ்லா எச்சரித்தார். “உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து இந்தியாவில் வேலை செய்யாதீர்கள்” என்று நீதிமன்றம் விக்கிபீடியாவை கடுமையாக சாடியது.