நவம்பர் 25, சென்னை (Technology News): இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G Smartphone) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமி (Xiaomi) நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ரூ.8,499-க்கு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது நவம்பர் 27ஆம் தேதி முதல் எம்ஐ.காம் (mi.com), அமேசான் இந்தியா (Amazon India), ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். Scam Alert: டிஐஜி-க்கு தொடர்பு கொண்டு சைபர் க்ரைம் மோசடி முயற்சி.. கேடி ஆசாமியை தேடும் போலீஸ்.!
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- இதில், HD+ தெளிவுத்திறனுடன் 6.88-இன்ச் IPS LCD மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைப் பெறுகிறது. வாட்டர் டிராப் நாட்ச் உள்ளே ஒரு 8MP ஃபிரெண்ட் கேமரா மற்றும் பின்புறத்தில் ஒரு 50MP மெயின் ஷூட்டர் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில், இரண்டு வருட சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு இணைப்புகளுடன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Xiaomi Hyper OS -யை போன் துவக்குகிறது.
- மேலும், இதில் 5,160mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சியோமி 33W சார்ஜர் போனுடன் கிடைக்கும்.
- பேஸ் வேரியண்டான 4ஜிபி + 64ஜிபி அறிமுக விலை ரூ.8,499, அதே சமயம் 4ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.9,499-க்கும் கிடைக்கும். இரண்டு வேரியண்ட்களும் Sparkle Purple மற்றும் Starry Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
- குறிப்பிடத்தக்க அம்சங்களாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஹெட்ஃபோன் ஜாக், எஃப்எம் ரேடியோ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகியவை அடங்கும்.