இதனால் பதறிப்போன அவரின் கணவர், மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கிராமத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மொத்தமாக பரிதாவை தேடி அலைந்துள்ளனர். இதனிடையே, சுமார் 16 அடி நீளமுள்ள (5 மீட்டர்) ராட்சத மலைப்பாம்பு ஒன்று, இறை ஒன்றை விழுங்கி செரிக்க இயலாமல் 3 நாட்களாக ஒரே இடத்தில் இருந்துள்ளது. Perambalur Shocker: ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் பரிதாப பலி; சாகப்போவதாக கத்திக்கொண்டு துயரம்..!
பாம்பை கொன்று பெண் சடலம் மீட்பு:
இதனால் பரிதாவை பாம்பு விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாம்பின் வயிறு கிழித்து பறிக்கப்பட்டுள்ளது. அச்சமயம், பெண்மணி பாம்பின் வயிற்றில் இறந்த நிலையில் கிடந்தது உறுதியானது. பாம்பை கொன்று பெண்ணை மீட்ட கிராமத்தினர், அவரின் இறுதிச்சடங்கு தொடர்பான விஷயத்தை நிறைவு செய்தனர்.
ஆண்டுக்கு ஒன்று முதல் 2 சம்பவங்கள்:
இந்தோனேஷியாவில் மனிதர்களை விழுங்கும் அளவு கொண்ட மலைப்பாம்புகள் வசித்து வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் புதிதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆனது தென்கிழக்கு சுலவெசி மாகாணத்தில் உள்ள தினஜிகே மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயி, 8 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பால் விழுங்கப்பட்டார். அதனைக்கண்ட மக்கள் மலைப்பாம்பை கொன்று விவசாயியை மீட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முனா நகரில், 7 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு வயிற்றுக்குள் 54 வயது பெண் இரண்டு கிடந்தார்.