Pope Francis (Photo Credit: @FatherCapo X)

பிப்ரவரி 18, ரோம் (World News): இத்தாலி நாட்டில் உள்ள வாடிகனில் (Vatican), ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), வயது முதுமை காரணமாக 2022ஆம் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின்னர், 2023ஆம் ஆண்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். US Storm: புயல் மழை, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு; 39 ஆயிரம் வீடுகளில் மின்தடை.. அமெரிக்காவில் கடும் பாதிப்பு..!

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி:

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதியுற்ற அவர், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு குழாயில் அழற்சி ஏற்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக மருத்துவர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். மேலும், அவருக்கு 'பாலிமைக்ரோபியல் சுவாசக்குழாய் தொற்று' (Polymicrobial Respiratory Tract Infection) இருப்பதை மருத்துவர்கள் பரிசோதனையின் மூலம் கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனையிலயே போப்பிற்கு சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.