ஜூலை 01, பிரான்ஸ் (France News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ், Nanterre நகரை சேர்ந்த 17 வயது இளைஞர் எம். நஹீல் (M Nahel). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, நஹீலை இடைமறித்த காவல் அதிகாரி விசாரணை நடத்தும்போதே சுட்டு கொலை செய்ததாக தெரியவருகிறது. இந்த தகவலை அறிந்த நஹீலின் உறவினர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போரட்டமானது பிரான்சில் வன்முறையாக மாறியுள்ளதால் பல இடங்களில் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் தீக்கு இறையாகியுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்த 45 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். PM Narendra Modi & President Vladimir Putin: மேக் ன் இந்தியா திட்டத்தால் வலுப்பெற்ற இந்திய பொருளாதாரம் – பாராட்டிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்.!

அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றசாட்டு குறித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது, நஹீலை அல்கெரிய நாட்டில் இருந்து குடிபெயர்ந்து வாழ்ந்து வருபவர் என்பதை அறிந்தே காவலர் கொலை செய்துள்ளார் என இனவெறியை சுட்டிக்காண்பித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிஸில் சர்ச்சையாகி இருக்கிறது.

உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று ஆங்காங்கே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஆப்ரிக்க - அமெரிக்க இளைஞரான George Floyd காவலர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்போது, அமெரிக்காவில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.