Prime Minister of India, Narendra Modi | President of Russia, Vladimir Putin (Photo Credit: Facebook / Wikipedia Commons)

ஜூலை 01, மாஸ்கோ (Moscow): ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.

அப்போது, இருதரப்பு கூட்டாண்மை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை எடுத்துக்கொண்டனர். இந்த உரையாடலின்போது ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து தகவல்கள் பகிரப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளன.

இருதலைவர்களும் ரஷிய - இந்திய நட்புறவை உறுதியாக்கவும், மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். டிசம்பரில் முதல் முறையாக 2 + 2 உரையாடலுக்கு தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Dharmapuri Suicide: கடனை வசூலிக்க புது டெக்னீக்.. நிதி நிறுவன பணியாளர்களுடன் வந்த அந்த 3 பேர்.. அவதூறு பேச்சால் பறிபோன உயிர்.!

Russian President, Vladimir Putin (Photo Credit: Wikipedia)

இராஜதந்திர நடவடிக்கை மூலமாக உக்ரைன் மோதலை தீர்க்க எவ்விதமான ஒத்துழைப்பும் உக்ரைன் சார்பில் வழங்கப்படவில்லை என்றும் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ரஷியாவின் சிறந்த நண்பர் என அழைத்த விளாடிமிர் புதின், மேக் ன் இந்தியா திட்டமானது இந்திய பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.