ஜூலை 13, ஏமன் (World News): உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் மக்கள் அனுதினமும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் தங்களது வாழ்நாட்களை கடத்தி வருகின்றனர். அவ்வப்போது அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே சண்டையும் நடக்கிறது. இதில் மக்கள் பிணையக்கைதி போல பிடிக்கப்படுவதும், குண்டுகள் வீசி கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஏமன் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது தைஸ் மாகாணம். இங்குள்ள அல் ஹாஷ்மா பகுதியில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், குண்டு வீச்சு நடந்துள்ளது.
கால்பந்து விளையாடிய சிறுவர்கள் பலி :
இந்த சம்பவத்தில் 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் அரசின் கூட்டணியில் இருக்கும் போராளிகள் குழு ஒன்று பீரங்கி குண்டை வீசியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் 12 வயது மற்றும் 14 வயதுடைய 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் தொடர் பதற்றம் மற்றும் ஏமனில் 2014 ஆம் ஆண்டு முதல் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக தொடர் சோகங்கள் நடந்து வருகிறது. Heatwave Death: வாட்டி வதைக்கும் வெயில்.. 10 நாட்களில் வெப்ப அலைக்கு 2300 பேர் உயிரிழப்பு.!
உயிரிழந்த சிறுவர்களின் புகைப்படம் :
Five children were killed Friday when a shell exploded in Al-Arsoom, near the frontline north of Taiz. The Yemen National Army and the Houthis are trading blame. Al-Arsoom is under Houthi control.
The victims were:
1) Osama Abu Bakr Ahmed Ali (12)
2) Mubarak Yasser Ali (14)
3)… pic.twitter.com/twk5SWtZcD
— Basha باشا (@BashaReport) July 12, 2025