European heatwave (Photo Credit : @TONYK619 X)

ஜூலை 11, ஐரோப்பியா (Wolrd News): ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கி கடும் வெப்பமானது நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள பிரான்ஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளிலும் வழக்கத்தைவிட கடுமையான வெப்ப அலையானது வீசி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம்வரை மக்களை வாட்டி வதைத்தது. ஸ்பெயினில் 106 டிகிரி செல்சியசும் வீசியது. ஐரோப்பிய நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவில் ஸ்பெயினில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரி வெப்பம் பதிவு செய்யப்பட்டது.

சிகப்பு எச்சரிக்கை :

வெப்ப அலைகளை சமாளிக்க பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. பிரான்சில் உள்ள மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனீச் பகுதிகளில் சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் பகுதி நேரமாக செயல்பட்டு வருகின்றன.

2300 பேர் பலி :

பூங்காக்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக தண்ணீர் பம்புகளும், செயற்கை நீரற்றுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வறட்சி, வெப்பம் காரணமாக காட்டு தீ உருவாகி பல ஏக்கர் நிலங்கள் தீயில் கருகி இருக்கின்றன. வனங்களும் தீயில் சிக்கி உள்ளன. தொழில்துறைக்கு முன்பிருந்த காலத்தை விட தற்போது ஐரோப்பா 30 டிகிரி செல்சியஸை உயர்வாக அனுபவித்து வருகிறது. இந்த நிலையில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு, தொழில் புரட்சி காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் வெயிலுக்காக 2300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.