
பிப்ரவரி 10, மெக்சிகோ (World News): வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் (Mexico) குயின்டானோ ரூ மாகாணத்தில், கான்கன் நகரில் இருந்து தபாஸ்கோ நகர் நோக்கி, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சொகுசு பேருந்து நேற்று (பிப்ரவரி 09) சென்றது. எஸ்கார்செகா நகரின் அருகே அந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதி (Bus Accident) விபத்துக்குள்ளானது. Earthquake: கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு.!
பேருந்து விபத்து:
மேலும், பேருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. பேருந்தில் இருந்த பயணியரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், தீயை அணைக்க போராடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் உட்பட 41 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.