அக்டோபர் 11, டாக்கா (World News): வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ள ஜசோரேஸ்வரி காளி அம்மன் (Jeshoreshwari Kali Temple) கோயிலுக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது, இந்த கோயிலில் உள்ள காளி அம்மனுக்கு கிரீடம் (Crown) ஒன்றை தானமாக வழங்கியிருந்தார். வெள்ளியில் செய்யப்பட்ட அந்த கீரிடத்தில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கும். PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
இந்தக் கிரீடம் தற்போது திருடுபோயுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காளி சிலையின் தலையில் கிரீடம் இல்லாமல் (Crown Stolen) இருந்ததை கண்ட கோயில் பணியாளர் இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து, வங்கதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதுரகம் கவலை தெரிவித்துள்ளது. இக்கோயில் 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இது, பின்னர் 13-ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் ராஜா பிரதாபதித்யா என்பவர் 16-ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலை மீண்டும் கட்டியதாகவும் கூறப்படுகின்றது.