Love Couple | Judgement (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 18, புதுடெல்லி (New Delhi News): ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் செக்டர் 29 பகுதியை சேர்ந்தவர் ரிஷப் நாயர். இவர் கடந்த 2023 ஏப்ரல் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நண்பர் கரண் என்பவரின் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர், இதுகுறித்து காவல் (Man Suicide Due to Love Failure) நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரிஷப் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஜாமின் வழங்கி உத்தரவு: இதனையடுத்து, உயிரிழந்த ரிஷப் நாயரின் தந்தை, மகன் காதலித்து வந்த பெண் ஆருஷி குப்தா என்பவருக்கு எதிராக, தனது மகன் காதலித்த பெண் வேறொருவருடன் உறவில் இருந்ததால் உயிரை மாய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் நாயரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட பெண்மணி மற்றும் அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆருஷி குப்தா மற்றும் அவரின் நண்பர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர்களான ஆருஷி குப்தா & அவரின் நண்பருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதி அமித் மகாஜன் அமர்வில் நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணையில், நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலாவது, JK Terror Attack: ஜம்மு காஷ்மீரில் சோகம்; பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதியால் சுட்டுக்கொலை.! 

Suicide - File Pic (Photo Credit: Pixabay)

தேர்வில் மாணவர் தோல்வியடைந்தால்... "காதல் தோல்வியின் காரணமாக ஆணொருவர் / காதலர் தற்கொலை செய்துகொண்டால், ஆணின் மனநிலையை காரணமாக வைத்து பெண்ணை / காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்ய முடியாது, பலவீனமான நபர் தான் எடுத்த முடிவுக்கு மற்றொருவரை குற்றவாளி என கூற இயலாது. தேர்வில் மாணவர் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொண்டால், மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டால், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதை வைத்து தேர்வாணைய அதிகாரி மற்றும் வழக்கறிஞர் கைது ஆகியோர் செய்யப்படமாட்டார்கள்.

பெண்ணை குற்றவாளியாக கருத முடியாது: இவ்வழக்கில் மனுதாரரான பெண், தற்கொலை செய்துகொண்டருடன் ஒருமித்த உறவில் இருந்தாலும், இருவரும் தனிமையில் சந்தித்தாலும் அவர்களின் வாட்சப் உள்ளிட்ட உரையாடல்களை கவனிக்கும்போது, உயிரிழந்த இளைஞர் பெண்ணை ஒவ்வொரு முறையும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி தனது வழிக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார். ஆதலால், அவர் மனமுடைந்து எடுத்த முடிவாக கூறப்படும் விவகாரத்தில், அவரின் செயல்பாட்டுக்கு பெண்ணை குற்றவாளியாக கருத இயலாது.

நிபந்தனையுடன் ஜாமின்: இருவரும் பொதுவான நண்பர்களாக இருந்து இருக்கின்றனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்படுகிறது. அவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளுக்கு உட்பட்டு, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சாட்சியங்களை அழிக்க முயற்சித்தல் கூடாது. டெல்லி மாநில எல்லையை விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.