ஆகஸ்ட் 05, டாக்கா (World News); வங்கதேசம் நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தலுக்கு பின் பிரதமராக பொறுப்பேற்ற ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் எனவும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வந்தன. இதனிடையே, வங்கதேச சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டோரின் குடும்பத்திற்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.
மீண்டும் வன்முறை சம்பவம்:
இந்த விசயத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எதிர்க்கட்சியும் இந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இந்த விஷயத்தில் நடந்த வன்முறையில் 120 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பலியாகி இருந்தனர். பின் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. Middle East Conflict: உச்சகட்டத்தை எட்டுகிறது இஸ்ரேல் - ஹமாஸ் போர்; மத்திய கிழக்கில் பதற்றம்.. குவிக்கப்படும் அமெரிக்க படைகள்.!
97 பேர் உயிரிழப்பு:
இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், இடஒதுக்கீடு விவகாரம் குறித்து நடைபெற்ற போராட்டத்தில், கவல்த்துறையினர் - போராட்டக்காரர்கள் இடையே எழுந்த மோதல் மீண்டும் வன்முறையாக உருவானது. இதனால் நாடு தழுவிய அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய வன்முறை சம்பவத்தில் தற்போது வரை காவல்துறையினர், பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு எச்சரிக்கை:
இதனால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்ற சூழல் உருவாகி இருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் தூதரகத்தை அணுகுமாரும் இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியர்கள் மறுஉத்தரவு வரும் வரையில் வங்கதேசம் செல்ல வேண்டாம் எனவும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.