Israel Hamas War | Middle East Tension (Photo Credit: @MichaelSCollura X)

ஆகஸ்ட் 04, ஜெருசலேம் (World News): கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 07ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியம் நாட்டை சேர்ந்த ஹமாஸ் குழு போர் தாக்குதல் நடத்தியது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலை எதிர்பாராத இஸ்ரேல், தனது குடிமக்கள் 1400 பேரை இழந்தது. இவர்களை ஹமாஸ் குழுவினர் கொடூரமாக தலை வெட்டி கொலை செய்தனர். 200 க்கும் அதிகமானோரை பிணையக்கைதியாக பிடித்துச்சென்றனர். இதனையடுத்து, போரில் களமிறங்கிய இஸ்ரேல் தனது நாட்டு மக்களை கொன்ற அமைப்பை சேர்ந்த ஒவ்வொருவரையும் அழிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனியத்தை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் 39000 க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். ஹமாஸ் குழுவை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் தேடித்தேடி கொல்லப்பட்டு வருகின்றனர். 82-Year-Old Woman Dies: வீட்டில் உறங்கிய 82 வயது மூதாட்டியை கடித்துகுதறிய நாய்கள்; துள்ளத்துடிக்க பரிதாப பலி..! 

ஈரானில் ஹனியே கொலை:

சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹனியே, ஈரான் நாட்டின் அழைப்பை ஏற்று, அந்நாட்டு அரசின் நிகழ்ச்சி ஒன்றுக்கு செந்துற்றபோது இஸ்ரேலின் தாக்குதல் கொல்லப்பட்டார். இதனால் ஈரானின் தலைமை மதகுரு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். லெபனான் நாடும் இஸ்ரேலுக்கு எதிராக இருப்பதால், அவ்வப்போது இருதரப்பும் சண்டையிட்டு வந்தது. இவ்வாறாக மத்திய கிழக்கில் உள்ள பெரும்பான்மை நாடுகள் ஹமாஸ் குழுவுக்கு ஆதராக இருக்க, அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் நின்று வருகிறது. போரை சமாதானமாக முடித்துக்கொள்ள எடுத்த பல முயற்சிகளும் இறுதிக்கட்டத்தில் தோல்வியை சந்தித்தன. ஹனியே கொல்லப்பட்ட பின்னர் போரின் தீவிரத்தன்மை அதிகரித்து இருக்கிறது. Online Loan App Scam: ஆன்லைன் லோன் ஆப்; முகத்தை மார்பிங் செய்து மிரட்டிய கும்பல்.. இளம்பெண் பரபரப்பு புகார்..!

போர் மூளும் அபாயம்:

இதனால் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த ஈரான் மற்றும் லெபனான் நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழலால், லெபனான் நாட்டில் இருப்போரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட பல நாடுகள் தாயகம் அழைத்து உத்தரவிட்டுள்ளது. லெபனானில் இருந்து ஏற்கனவே ஹபிபுல்லா அமைப்பு இஸ்ரேல் நகரங்கள் நோக்கி ஏவுகணை அனுப்பி வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், அதனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. இதனால் போர்ப்பதற்றம் இஸ்ரேலில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளும் அபாயமும் உண்டாகி இருக்கிறது.

ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான், சிரியா, ஏமனின் ஹவுதி உட்பட பல நாடுகளில் இருந்து நேரடி மற்றும் மறைமுக உதவிகள் கிடைக்கின்றன. அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கி இருக்கிறது. ஒருவேளை அமெரிக்க துருப்புகள் நேரடியாக தாக்குதலை எதிர்கொண்டால், போரில் அமெரிக்கா களமிறங்கும் வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.