ஆகஸ்ட் 02, நைஜீரியா (Africa): நைஜீரியா நாட்டின் தலைநகர் லாகோஸில், சிறிய ரக தனியார் விமானம் 2 பயணிகளுடன் நடுவானில் பயணம் செய்தது. இந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டுள்ளது.

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போன, அது தரையில் விழ ஆயத்தமாகியுள்ளது. இவர்கள் பயணித்தபோது லாகோஸ் நகரின் முக்கிய வீதியை நோக்கி விமானம் சென்றுள்ளது.

விமானத்தை அதன் போக்கிலேயே விட்டு தனது கட்டுக்குள் வைத்திருந்த சாதுர்ய விமானி, விமானம் கீழே விழுந்து நொறுங்கும் தருணம் வந்தபோது இலாவகமாக அதனை பாதுகாப்பாக தரையிறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். Cheetah Dhatri: உடல்நலக்குறைவால் மர்ம மரணமடைந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.! 

இதனால் விமானம் நேரடியாக விபத்தில் சிக்காமல், நகரின் நடுவில் இருந்த சாலையில் தரையிறங்கி விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் பொதுமக்களுக்கு எவ்வித காயமும் இல்லை.

ஆனால், விமானத்தில் பயணம் செய்த இருவரும் லேசான காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.