ஆகஸ்ட் 02, குனோ (Guno National Park): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில், தாத்ரி (Dhatri) என்ற பெண் சிறுத்தை வசித்து வருகிறது. இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டு வந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், இன்று தாத்ரி சிறுத்தை தனது இருப்பிடத்தில் உயிரிழந்துள்ளது. குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் உயிரிழந்து இருக்கின்றன. Trending Video: “நீ தில்லான ஆளுதான் தல, கரணம் தப்பினால் மகனே”.. ஓடும் ரயிலுக்கு அடியில் இளைஞர் பகீர் செயல்.! 

இந்த விஷயத்தை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசீம் ஸ்ரீவஸ்தவா உறுதி செய்துள்ளார். சிறுத்தையின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அசீம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சிறுத்தை தாத்ரியின் பராமரிப்பாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.