Earthquake (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, தைபே (World News): தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. யூஜிங் பகுதிக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தை கண்டு மக்கள் பீதியில் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்; கேரளவைச் சேர்ந்தவர் பலி.. வெளியான திடுக்கிடும் உண்மை.!

தைவான் நிலநடுக்கம்:

இதில், 27 பேர் காயம் அடைந்ததாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் நான்ஸ்சி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் சிக்கி இருந்த குழந்தை உள்ளிட்ட 6 பேர் மீட்புக்குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூவேய் பாலம் சேதமடைந்து உள்ளதாகவும் பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: