Earthquake (Photo Credit: Pixabay)

மார்ச் 25, வெலிங்டன் (World News): நியூசிலாந்து நாட்டின் மேற்கு பகுதியில், இன்று (மார்ச் 25) இந்திய நேரப்படி காலை 7.13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். தெற்கு தீவின் தென்மேற்கு பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. Passenger Tried to Burn the Plane: ஒத்த ரோசா.. என்ன இதெல்லாம்? சிகிரெட் பிடித்து, விமானத்தை எரிக்க முயற்சி.. அலறிய பயணிகள்.!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த 1931ஆம் ஆண்டு, நியூசிலாந்தின் ஹாக்ஸ் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில், 256 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.