Pager Blast In Lebanon (Photo Credit: @shandiannews X)

செப்டம்பர் 18, டமாஸ்கஸ் (World News): லெபனான் நாட்டில் (Lebanon) நூற்றுக்கணக்கான பேஜர்கள் (Pager Blast) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 2750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. MEA Condemns: 'இந்திய இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர்' - ஈரான் உச்ச தலைவர் சர்ச்சை கருத்து.. இந்தியா பதிலடி..!

ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், அதை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் காயமைடந்துள்ளதாக ஈரான் (Iran) ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 6 மணி ஆகும்.

ஈரான் ஆதரவைப் பெற்ற அமைப்புதான் ஹிஸ்புல்லா. இந்த அமைப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தடையுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்படுகின்றது. இஸ்ரேல்-காஸா இடையிலான போரில் ஹிஸ்புல்லாவும் பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ளது. பேஜர் சாதனங்களில் உள்ள லித்தியம் பேட்டரிகளை அதீதமாக சூடுபடுத்தி வைத்து இந்த தாக்குதலை சைபர் ஹேக்கிங் முறையில் நடத்தியுள்ளனர் என கூறப்படுகின்றது. நாடு முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும் இஸ்ரேல்தான் நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறது.

பேஜர் குண்டுவெடிப்பு சம்பவ காட்சிகள்: