செப்டம்பர் 17, புதுடெல்லி (New Delhi): இந்திய முஸ்லீம்கள் (Muslims) குறித்து ஈரான் (Iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியா கூறியுள்ளது. இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதராக கூறப்படும் முகமது நபிகளின் பிறந்தநாள் தினத்தையொட்டி ஈரான் உச்ச தலைவர் (Iranian Supreme Leader) அயத்துல்லா அலி கமேனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். Software Engineer Dies: கணேஷ் பந்தலில் நடனமாடிய மென்பொறியாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட பதிவு:
அதில், 'இந்தியாவில் இஸ்லாமிய மதத்தினர் துன்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்லாமிய அடையாளங்களை பகிர்ந்துள்ள நம்மை எப்போதும் அலட்சியப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கின்றனர். காசா, மியான்மர், இந்தியா என உலகின் எந்த பகுதியிலும் இஸ்லாமியர்கள் படும் துன்பங்களை மறந்தால் நாம் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது’ என பதிவிட்டுள்ளார்.
இந்தியா பதிலடி:
இந்நிலையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் (Indian Muslims) துன்பப்படுவதாக ஈரான் உச்ச தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து, ஈரான் உச்ச தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதுபோன்ற தவறான தகவல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள், தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து முதலில் சிந்திக்கும்படி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.